அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் தொழிலாளியால் பரபரப்பு


அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் தொழிலாளியால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:20 PM GMT)

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (வயது 40). இவருக்கு ராணி, பூங்கோதை ஆகிய 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வந்த தோமஸ் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியிலுள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை செய்த இடத்திலும் அடிக்கடி சிலர் தகராறில் ஈடுபட்டு தாக்கியதால் தோமஸ் மனவேதனையில் இருந்தார். கடந்த சில நாட்களாக பெரம்பலூர் நகரில் தோமஸ் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலுள்ள புறக்காவல் நிலையத்தை ஓட்டியவாறு இருக்கும் புளியமரத்தில் ஏறிய தோமஸ், அதன் உச்சி பகுதிக்கு சென்று கீழே குதிக்க முயன்றார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் தோமசை மீட்பதற்காக அந்த மரத்தில் ஏறினர். அப்போது புளியமர கிளைகளில் அங்கும், இங்கும் தாவிய தோமஸ் திடீரென மரத்திலிருந்து அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்டு சுவரை தாண்டி வெளியே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மனக்குழப்பத்தின் காரணமாக தோமஸ் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story