மகளை கற்பழித்த போக்குவரத்து அதிகாரிக்கு வலைவீச்சு


மகளை கற்பழித்த போக்குவரத்து அதிகாரிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:37 PM GMT)

புனே சிவாஜிநகர் பஸ் டெப்போவில் பணிபுரிந்து வரும் 54 வயது அதிகாரி ஒருவர், 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.

புனே,

புனே சிவாஜிநகர் பஸ் டெப்போவில் பணிபுரிந்து வரும் 54 வயது அதிகாரி ஒருவர், 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். இவரது மூத்த மனைவிக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். இந்தநிலையில், தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த அந்த அதிகாரி, கடந்த ஓராண்டாக அவரை கற்பழித்து வந்தார்.

தந்தையின் காம இச்சையால் பாதிக்கப்பட்ட அவர், இதில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று முடிவு செய்தார். இந்தநிலையில், ஒருநாள் அவரது தந்தை அவரிடம், ‘‘நீ என் மகள். உன்னோடு நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை உன் அம்மாவிடம் சொன்னால், வரும்காலத்தில் உங்கள் அனைவரையும் நான் கைவிட்டுவிடுவேன்’’ என்று மிரட்டினார்.

இதனை அந்த பெண் ரகசியமாக செல்போனில் பதிவு செய்து கொண்டதுடன், இதை போலீசில் ஒப்படைத்து தந்தை மீது புகார் அளித்தார். இதையறிந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story