18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு: சபாநாயகர், முதல்–அமைச்சருக்கு சேலை அனுப்பும் போராட்டம்


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு: சபாநாயகர், முதல்–அமைச்சருக்கு சேலை அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-21T03:24:33+05:30)

கட்சி தாவல் சட்டத்தின்படி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.

ஈரோடு,

கட்சி தாவல் சட்டத்தின்படி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரியும் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் சார்பில் சபாநாயகர் தனபாலுக்கும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சேலை, ‘நைட்டி’ அனுப்பும் போராட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெகதீசன் தலைமையில் சங்கத்தினர் ஈரோடு தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் சேலை, ‘நைட்டி’யை பார்சல் செய்து சபாநாயகருக்கும், முதல்–அமைச்சருக்கும் தபால் மூலமாக அனுப்பி வைத்தனர்.


Next Story