முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; இந்து அமைப்புகளை சேர்ந்த 16 பேர் கைது


முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; இந்து அமைப்புகளை சேர்ந்த 16 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 7:20 PM GMT)

முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; இந்து அமைப்புகளை சேர்ந்த 16 பேர் கைது

திருச்சி,

திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் சர்வைட் மெட்ரிகுலேசன் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், தீபாவளிக்கு வீட்டில் பட்டாசு வெடித்த மாணவ-மாணவிகளுக்கு தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்து பள்ளியை அரசே கையகப்படுத்த வலியுறுத்தியும், மதுரை ரோட்டில் காந்தி மார்க்கெட்டில் உள்ள திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அகில பாரத இந்துமகா சபா, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா ஆகிய இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன. இதற்கு காந்தி மார்க்கெட் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை இந்து மகா சபாவின் மாநில துணைத்தலைவர் கங்காதரன், அனுமன் சேனாவின் மாநில துணை பொதுச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட முயன்ற 16 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story