வாணாபுரம் அருகே விவசாய நிலத்தில் சுரங்கப்பாதை வருவாய்த் துறையினர் விசாரணை


வாணாபுரம் அருகே விவசாய நிலத்தில் சுரங்கப்பாதை வருவாய்த் துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 7:55 PM GMT)

வாணாபுரம் அருகே விவசாய நிலத்தில் சுரங்கப்பாதை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே பெருமணம் பகுதியை சேர்ந்த வர் சீனிவாசன் (வயது 49) என்பவர் அங்குள்ள கைலாச நாதர் கோவிலுக்கு சொந்த மான நிலத்தில் பயிரிட்டு பராமரித்து வந்தார்.

தற்போது மழைகாலம் தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டும் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மீண்டும் விவசாய பயிர் செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நிலத்தில் நெற்பயிர் வைப்பதற்காக டிராக்டர் மூலம் நிலத்தை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

வருவாய்த் துறையினர் விசாரணை

இதனையடுத்து சீனிவாசன் அந்த பகுதியை சேர்ந்தவர் களிடம் இது பற்றி தெரிவித் தார். பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தச்சம்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் இருப் பதால், கோவிலில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து முன்னோர்கள் வாழ்ந்திருக்க லாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை தாசில்தார் ரவி மற்றும் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

சுரங்கப்பாதை இருந்ததை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சிரியத் துடன் பார்த்து சென்றனர். 

Next Story