சங்கரன்கோவில் அருகே மாணவன் மர்மச்சாவில் பள்ளி நிர்வாகி கைது மேலும் 2 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு


சங்கரன்கோவில் அருகே மாணவன் மர்மச்சாவில் பள்ளி நிர்வாகி கைது மேலும் 2 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Nov 2017 8:30 PM GMT (Updated: 29 Nov 2017 2:21 PM GMT)

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவன் மர்மச்சாவில், பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவன் மர்மச்சாவில், பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவன் மர்மச்சாவு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரடிகுளம் சின்ன காலனியை சேர்ந்தவர் முருகன் – மாலதி தம்பதியரின் இரண்டாவது மகன் கவின்(வயது 4). செவல்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கவின், பள்ளியில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் கவினின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கொடுத்திருந்த நிலையில் பெற்றோர் வருவதற்கு முன்பு பள்ளி வாகனத்தில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் ஏராளமாமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். நாங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாகவே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும், கவினின் மரணத்தின் சந்தேகம் உள்ளதாகவும் கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவனின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி செய்யக்கோரி, மாணவனை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மாணவன் கவினின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

பள்ளி நிர்வாகி கைது

இந்நிலையில் மாணவன் கவினின் தந்தை முருகன், குருவிகுளம் போலீசில் புகார் செய்தார். அதில் “பள்ளி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், அஜாக்கிரதையாலும் இருந்ததால் தான் தனது மகன் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் பள்ளி நிர்வாகியான சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் நாகராஜை(38) போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளி ஆசிரியைகள் மீனா, இந்திராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story