வில்லிசேரி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு புகார்: செயலாளர், பெண் ஊழியர் சஸ்பெண்டு


வில்லிசேரி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு புகார்: செயலாளர், பெண் ஊழியர் சஸ்பெண்டு
x
தினத்தந்தி 30 Dec 2017 8:30 PM GMT (Updated: 30 Dec 2017 12:49 PM GMT)

வில்லிசேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதன் செயலாளர், பெண் ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி,

வில்லிசேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதன் செயலாளர், பெண் ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்த 2015–2016–ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கடந்த 22–ந் தேதி வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 106 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.

2 பேர் சஸ்பெண்டு

தொடர்ந்து கோவில்பட்டி கூட்டுறவு சார்பதிவாளர்கள், வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு முறைகேடுகள் நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மாரியப்பன், சங்க அலுவலக ஊழியர் அய்யம்மாள் ஆகிய 2 பேரும் நேற்று சஸ்பெண்டு (தற்காலிக பணி நீக்கம்) செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவினை சங்க செயலாளர் மாரியப்பனிடம் சங்க தலைவர் பால்ராஜ் வழங்கினார். சங்க செயலாளர் மாரியப்பன் சங்க அலுவலக பொறுப்புகள் மற்றும் சாவியை எழுத்தர் ராமசுப்புவிடம் ஒப்படைத்தார். அப்போது கூட்டுறவு சார்பதிவாளர் செண்பகவல்லி, கூட்டுறவு சங்க துணை தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேசுநாயக்கர், ராஜகலா, சீனிவாசகன் ஆகியோர் உடன் இருந்தனர். சங்க ஊழியர் அய்யம்மாளுக்கு தற்காலிக பணி நீக்க உத்தரவு பதிவு தபாலில் அனுப்பப்பட்டது.


Next Story