தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அரசு கல்லூரி தொடங்க வேண்டும்


தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அரசு கல்லூரி தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Dec 2017 10:30 PM GMT (Updated: 30 Dec 2017 9:16 PM GMT)

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவராமன் வரவேற்றார்.

இதில் 6-வது ஊதிய குழு ஊதிய முரண்பாடுகளை களைந்து, 7-வது ஊதிய குழு ஊதியத்தை எந்தவித காலதாமமும் இன்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் போதிய உள் கட்டமைப்பு, பணி நியமனம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தரம் உயர்த்தும் விதமாக உயர் கல்விக்கான நிதியை குறைந்தபட்சம் ஜி.டி.பி.யில் 8 சதவீதம் ஆக உயர்த்தி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அரசு கல்லூரி

ஆய்வு பணியை ஊக்கப் படுத்தும் விதமாக எம்.பில்., பி.எச்.டி. ஆகிய ஆராய்ச்சி பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயர்கல்வி துறையில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக் குறையை போக்கும் விதமாக மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இணையாக ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும்.

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ் நாட்டில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு அரசு கல்லூரி தொடங்க வேண்டும். கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஓய்வுக்கு பின் பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை உடனடியாக ரத்து செய்து, பணி மூப்பு தத்துவம் மற்றும் சமூக நீதி நிலைநாட்ட வேண்டும்.

கல்லூரி விரிவுரையாளர்கள்

புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ்-ஐ ரத்து செய்து சமூக பாதுகாப்பு திட்டமான பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை ஒரு சிறப்பு சிறப்பு தேர்வின் மூலம் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு தொழிற்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நியமன தேர்வு முறையில் உள்ள முறைகேடுகளை வன்மையாக கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் துணை தலைவர்கள் வெங்கடேசன், சேவுகன், இணை செயலாளர்கள் சிவராமன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story