அமெரிக்க அதிபருக்கு நேர்ந்த அவமானம்


அமெரிக்க அதிபருக்கு நேர்ந்த அவமானம்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:29 AM GMT (Updated: 2 Feb 2018 10:29 AM GMT)

அமெரிக்காவில் இருக்கும் ‘குஹ்ஹெனீம்’ என்ற அருங்காட்சியகத்தில், பிரபல ஓவியர் வான்கா வரைந்த ஓவியம் ஒன்று இருக்கிறது. ‘லேண்ட்ஸ்கேப் அண்ட் ஸ்னோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம், 1888-ல் வரையப்பட்டது.

பச்சைப் புல்வெளியில் மனிதரும், நாயும் நடந்து செல்வது போல அமைந்தது இந்த ஓவியம். இதன் தற்போதைய மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். இந்த ஓவியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடைய தனி வீட்டில் வைக்க கேட்டு இருக் கிறார். இதற்காக அவர் அந்த அருங்காட்சியகத்திற்கு கடிதம் கூட எழுதி இருக்கிறார். ஆனால் அந்த ஓவியத்தை விற்க மறுத்த அருங்காட்சியக நிர்வாகம், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பதில் அனுப்பி இருக்கிறது.

“இப்போது அந்த ஓவியத்தை விற்கும் எண்ணத்தில் இல்லை. அதற்குப் பதிலாக உங்களுக்கு ‘அமெரிக்கா’ என்ற டாய்லெட் ஒன்றை தருகிறோம். இது 18 கேரட் தங்கத்தால் ஆனது. இதை உங்கள் வீட்டில் வந்து நாங்களே பொருத்தித் தருகிறோம். மேலும் எப்படி இதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறோம். முக்கியமாக இதை நீங்கள் வாங்க முடியாது. சில மாத வாடகைக்கு மட்டுமே எடுக்கலாம்” என்று தடாலடியாக பதிலளித்திருக்கிறார்கள்.

“இது அமெரிக்க அதிபருக்கு நேர்ந்த பெரிய அவமானம் என்றும், வேண்டும் என்றே அதிபரை அந்த அருங்காட்சியக நிர்வாகம் அவமானப்படுத்தி இருப்பதாகவும்” பேஸ்புக்கில் பல சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருக்க, வெள்ளை மாளிகை மவுனம் சாதிக்கிறது.

Next Story