மாவட்ட செய்திகள்

திருப்பூரில், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்: தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் 100 பேர் கைது + "||" + C-66-272546Tamil Renaissance Society Arrested

திருப்பூரில், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்: தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் 100 பேர் கைது

திருப்பூரில், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்: தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் 100 பேர் கைது
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பிரசார நடைபயணம் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் நேற்று நடைபெற்றது.

திருப்பூர்,

தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பிரசார நடைபயணம் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சுப.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் மணிமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னம்பாளையத்தில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பல்லடம் ரோட்டில் ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றனர். அதற்குள் 30 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து பெரிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. யானைகள் நலவாழ்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 பேர் கைது
யானைகள் புத்துணர்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா 3 பேர் கைது
கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. தடையை மீறி போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேர் கைது
திருச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு பணியாளர்கள் மனுகொடுக்க வந்தனர்.