பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 9:30 PM GMT (Updated: 24 May 2018 8:55 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமார் வரவேற்றார். வட்டார தலைவர்கள் ரமேஷ், சீத்தாராமன், ராமச்சந்திரன், குணசேகரன், நகர தலைவர்கள் திலகர், முருகன், குள்ளபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதற்கு காரணமான தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர்கள் ரெங்கமணி, வேலுச்சாமி, சபியுல்லா, கிருஷ்ணமூர்த்தி, மணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், காமராஜ், கிஷோர், சாந்திராஜ், முருகன், செல்வக்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஓவியர் ரமேஷ், சங்கர், மாரி, கோபால், ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story