மாவட்டம் முழுவதும் 90 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


மாவட்டம் முழுவதும் 90 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

தேசிய மயமாக்கப்பட் வங்கி ஊழியர்கள்90 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணப்பரிமாற்றம் அடியோடு முடங்கியது.

விருதுநகர்,

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஊதிய ஊயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும், இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இதனால் நாடு முழுவதும் உள்ள 90 ஆயிரம் வங்கி கிளைகள் செயல்படாது என்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்து இருந்தது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் இம்மாவட்டத்தில் உள்ள 140 வங்கி கிளைகளில் 104 வங்கி கிளைகள் செயல்படவில்லை. 45 தனியார் வங்கி கிளைகளில் 11 தனியார் வங்கி கிளைகள் செயல்படவில்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை பொருத்தமட்டில் மொத்தம் உள்ள 701 வங்கி ஊழியர்களில் 616 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 417 அதிகாரிகளில் 363 பேர் வேலைக்கு வரவில்லை. 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தனியார் வங்கிகளை பொருத்தமட்டில் 207 வங்கி ஊழியர்களில் 68 பேரும், 141 வங்கி அதிகாரிகளில் 49 பேரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

வணிக நகரான விருதுநகரில் பணப்பரிமாற்றம் முற்றிலுமாக வங்கிகள் மூலமே நடந்து வரும் நிலையில் வங்கிகள் வேலை நிறுத்தத்தால் பணப்பரிமாற்றம் அடியோடு முடங்கியது. இதனால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 2 நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் என்பதால் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இருப்பு இல்லாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.


Next Story