கடற்படை அலுவலக கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


கடற்படை அலுவலக கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 30 May 2018 9:41 PM GMT (Updated: 30 May 2018 9:41 PM GMT)

கடற்படை அலுவலக கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

மும்பை கொலபாவில் கடற்படை அதிகாரிகள் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் விகாஸ் குமார் என்ற தொழிலாளியும் ஈடுபட்டு இருந்தார்.

நேற்றுமுன்தினம் இவர் அந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் துரதிருஷ்டவசமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கப்பரடே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக பணியை செய்யும் காண்டிராக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story