புனேயில் கடத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்பு இளம்பெண் சிக்கினார்


புனேயில் கடத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்பு இளம்பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 9:35 PM GMT)

புனேயில் கடத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந் ைதயை கடத்தி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே வார்ஜே பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு ஸ்ரேயாஸ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் ரோகிணி என்ற 20 வயது இளம்பெண் குழந்தையின்மை காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மனிஷாவின் வீட்டுக்கு அந்த ரோகிணி குழந்தை ஸ்ரேயாசுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க விரும்புவதாக கூறி அவனை தன்னுடன் கடைக்கு எடுத்து சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் மனிஷா அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். அப்போது ரோகிணி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் பதறிப்போன மனிஷா இதுக்குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகிணியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், ரோகிணி தனது சொந்த ஊரான சோலாப்பூர் பார்ஷி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ரோகிணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தை ஸ்ரேயாசை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, ரோகிணி குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக தெரிவித்தார்.

Next Story