அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 8:03 PM GMT)

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கரூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில், மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் அன்பரசு, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் பிரபுராம், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்களை கல்லூரி டீன் ஒருமையில் பேசியதை கண்டித்தும், மருத்துவக்கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவினை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

Next Story