வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறையில் வந்திருந்த போது விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறையில் வந்திருந்த போது விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்து 98 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், ஜீவாநகரை சேர்ந்தவர் சையது அலி (வயது36). இவருக்கு பர்மினாஸ் பீவி என்ற மனைவியும், ஆய்ஷா பானு (5), ஆதிபா (1) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

சையது அலி, சவுதிஅரேபியாவில் உள்ள ரியாதில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 2017–ம் ஆண்டு 2 மாத விடுப்பில் ஊருக்கு வந்துஇருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் சேத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சையது அலி உயிரிழந்தார்.

இதனையடுத்து சையது அலியின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், மதுரை திருநகரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி, சையது அலியின் வாரிசுதாரருக்கு ரூ.23 லட்சத்து 98 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


Next Story