அரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்


அரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:06 PM GMT (Updated: 9 Jan 2019 11:06 PM GMT)

அரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டால் வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பில் அரிக்கன்மேடு எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. இங்கு பண்டைய காலத்தில் வாணிபம் நடந்ததாக சான்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேவாலயங்களின் தூண்களும் இடிந்த சுவர்களும் நினைவு சின்னங்களாக உள்ளது.

இந்த நினைவு சின்னத்திற்கு வடக்கு பகுதியில் ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கட்டாந்தரையான பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் போலீசில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கப்பட்டால், வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் உள்ளது. இதை பாதுகாக்கவும், மண் திருட்டை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story