‘ஸ்கேட்டிங்’ காலணியில் மறைத்து கடத்திய ரூ.8 லட்சம் தங்கம் பறிமுதல்


‘ஸ்கேட்டிங்’ காலணியில் மறைத்து கடத்திய ரூ.8 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:16 PM GMT (Updated: 10 Feb 2019 10:16 PM GMT)

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

ஆலந்தூர், 

விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ‘ஸ்கேட்டிங்’ காலணி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது காலணி மற்றும் அதில் உள்ள சக்கரங்களில் தங்க சங்கிலி மற்றும் உருளை வடிவ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

அந்த வாலிபரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 225 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த தங்கத்தை அவர் யாருக்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story