பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை
4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்தன. சில இடங்களில் வழக்கம் போல் குறைவான பணியாளர்களை கொண்டு இயங்கியது.
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜூ, பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆறுமுகம், ரோஸ் சிறில் சேவியர், செல்வராஜ், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் மகளிர் அணி அமைப்பாளர் இந்திரா, ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் ஜார்ஜ், ராஜேந்திரன், சுயம்புலிங்கம், காளியப்பன் உள்ளிட்ட ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொலைபேசி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ராஜூ கூறியதாவது:-
எங்களது போராட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாகர்கோவிலில் உள்ள 2 வாடிக்கையாளர் சேவை மையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடின. குலசேகரம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் ஒன்றிரண்டுநபரை கொண்டு தொலைபேசி நிலையங்கள் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story