மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட உதவி போலீஸ் கமி‌ஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்


மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட உதவி போலீஸ் கமி‌ஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:56 PM GMT (Updated: 18 Feb 2019 10:56 PM GMT)

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட உதவி போலீஸ் கமி‌ஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 89 உதவி போலீஸ் கமி‌ஷனர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மதுரை நகர், புறநகர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:–

மதுரை மாவட்டம் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த மதியழகன் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரக்குமரன் தேனிக்கு மாற்றப்பட்டார். மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் ரமேஷ் தேனி மாவட்டம் குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டம்–ஒழுங்கு உதவி போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து பீர்முகைதீன் விருதுநகர் நிலஅபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் நிலஅபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்யாணகுமார் கரூர் மாவட்டம் குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கும், கருர் மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி மதுரை நகர் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் மல்லிகா, நெல்லை மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டார்.

நெல்லை மாவட்டம் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மதுரை திலகர்திடல் குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை திலகர்திடல் குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் மோகன் தம்பிராஜன், சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன், ராமநாதபுரம் மாவட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியில் இருந்த வெள்ளைச்சாமி மதுரை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் ராஜசேகரன் சென்னை குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Next Story