பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் வலம் வரும் பெண் கன்னியாகுமரி வந்தார்


பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் வலம் வரும் பெண் கன்னியாகுமரி வந்தார்
x
தினத்தந்தி 18 March 2019 10:45 PM GMT (Updated: 18 March 2019 2:46 PM GMT)

இந்தியாவின் பெண்விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

கன்னியாகுமரி,

கோவையை சேர்ந்தவர் சங்கீதா ஸ்ரீதர் (வயது52). ஒமன் நாட்டின் இணையதள ஆலோசகராக பணியாற்றியவர். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவின் பெண்விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12–ந் தேதி மும்பையில் தொடங்கினார். 32 மாநிலங்கள் வழியாக சுமார் 42 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பெண்களின் பாதுகாப்பு, காந்திய கொள்கை, தூய்மை இந்தியா போன்றவைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்து வருகிறேன். இதுவரை 3 லட்சம் பெண்களை சந்தித்துள்ளேன். அடுத்த மாதம் (ஏப்ரல்) 7–ந் தேதி மும்பையில் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன். பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு சட்டங்கள் கடுமையாக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story