திருவாரூரில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 7:15 PM GMT)

திருவாரூரில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆதலால் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் பொது வினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரவைக்கு அனுப்புவதற்காக நெல் மூட்டைகள் 70 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் ஏற்றினர். அரவைக்காக ஏற்றப்பட்ட 950 டன் சன்னரக நெல்லுடன் திருவாரூரில் இருந்து சிவகங்கைக்கு சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story