மாவட்ட செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி மோசடிஏஜெண்டு உள்பட 3 பேர் கைது + "||" + Rs.1.21 crore fraud on land purchase 3 people arrested, including the Agent

நிலம் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி மோசடிஏஜெண்டு உள்பட 3 பேர் கைது

நிலம் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி மோசடிஏஜெண்டு உள்பட 3 பேர் கைது
நிலம் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.1.21 கோடி மோசடி செய்த ஏஜெண்டு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

மும்பையை சேர்ந்தவர் பிரவின் பாய். கட்டுமான அதிபர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏஜெண்டான சந்திப் ஷா (60) என்பவரிடம் கோரேகாவில் உள்ள நிலத்தை வாங்கி தருமாறு கூறினார்.

இதையடுத்து அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி பிரவின் பாயிடம் இருந்து முன்பணமாக ரூ.1 கோடியே 21 லட்சத்தை வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளான குல்கர்னி (56), தேவேந்திரா ராவ் (50) ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில், பிரவின் பாய் ஆவணங்களை சரிபார்த்த போது அது போலியானது என்பதும், அந்த நிலம் வேறொரு நபருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏஜெண்டு சந்திப் ஷா, முன்னாள் வங்கி ஊழியர் குல்கர்னி, தேவேந்திரா ராவ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில், மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது - 162 பாட்டில்கள் பறிமுதல்
சேலத்தில் மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 162 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது
பவானிசாகர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
3. நாமக்கல்லில், மடிக்கணினி திருடிய 3 பேர் கைது
நாமக்கல்லில் மடிக்கணினி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது
சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.
5. ரூ.13 லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது
ரூ.13 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.