மாவட்ட செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது + "||" + A glass breaker arrested by two buses near Manavalakurichi

மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது
மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் சகாய ஜினோ (வயது 28), மீனவர். இவர் கடியப்பட்டணத்தில் இருந்து  முட்டம் வழியாக அம்மாண்டிவிளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


 அம்மாண்டிவிளை சந்திப்பில் செல்லும் போது, நாகர்கோவிலில் இருந்து முட்டம் நோக்கி வந்த அரசு பஸ்சில் சகாய ஜினோவுக்கு தெரிந்த சிலர் இருந்தனர். அவர்கள் சகாய ஜினோவை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து, தன்னை கிண்டல் செய்தவர்களை நோக்கி வீசினார். ஆனால் அந்த கல் பஸ்சின் முன்பக்கத்தில் பட்டு கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்படியும் ஆத்திரம் அடங்காத சகாய ஜினோ, முட்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற இன்னொரு அரசு பஸ்சின் மீதும் கல்லை எடுத்து வீசினார். அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுடன், டிரைவர் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி பாலகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய ஜினோவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி கடலில் தத்தளித்த வாலிபர் ரோந்து படகில் சென்று போலீசார் மீட்டனர்
கன்னியாகுமரி கடலில் தத்தளித்த வாலிபரை போலீசார் ரோந்து படகில் சென்று மீட்டனர்.
2. திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி டாக்டராக நடித்தது பற்றியும் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
3. கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது
கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி : கொலை வழக்காக மாற்றம் - 3 பேர் கைது
தானிப்பாடி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வெள்ளிச்சந்தை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
வெள்ளிச்சந்தை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.