தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலுக்கு 5,722 வாக்குப்பதிவு எந்திரங்கள் 200 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன
தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலுக்கு 5,722 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்தும் 200 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.
தஞ்சாவூர்,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இது தவிர தஞ்சை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தஞ்சை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,691 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரத்து 722 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 662 கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம் 4,005 ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.
இந்த எந்திரங்கள் அனைத்தும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 200 வாகனங்களில் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன. இந்த எந்திரங்களுடன் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் அடையாள மை, எழுது பொருட்கள், வாக்காளர்கள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட 22 வகையான பொருட்களும் மூட்டையாக கட்டி அனுப்பப்பட்டன.
இந்த மையங்களில் 11 ஆயிரத்து 781 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை சுற்றி மறைத்து வைப்பதற்கான அட்டைப்பெட்டி ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன.
வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல்படையினரும் சென்றனர். நேற்று மதியம் 12 மணி முதல் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் எடுத்து செல்லப்பட்டன.
தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி தொடர்பாக தேவையான உதவிகளை செய்ய 195 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டல குழுவிற்கும் சராசரியாக 10 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story