பேட்டரி கார் வசதி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆய்வு


பேட்டரி கார் வசதி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆய்வு
x
தினத்தந்தி 18 April 2019 4:00 AM IST (Updated: 18 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக குடிதண்ணீர் தொட்டி அந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடும் வெயிலினால் மக்களும் நோயாளிகளும் அவதிப்படுவதை கருத்தில் கொண்டு ஒரே நாளில் இந்த நிழற்குடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சியின் துணையோடு குடி தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக ஏற்படுத்தி தந்த நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கோடை கால வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளி பிரிவு வரை செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உள்நோயாளி பிரிவிற்கு எதிரிலும் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மருத்துவர் ரவிநாதன் மற்றும் உதவி மருத்துவர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story