வீர தீர செயல்களுக்கான அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


வீர தீர செயல்களுக்கான அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 7:45 PM GMT)

வீர தீர செயல்களுக்கான அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி கூறினார்.

கரூர்,

நமது நாட்டில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இந்திய அரசால் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகள் 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவை அசோக சக்ரா விருது (தன்னிகற்ற தியாகம் புரிந்தவர்கள்) கீர்த்தி சக்ரா விருது (பகட்டான வீரத்துடன் போராடியவர்கள்) மற்றும் ஷவர்ய சக்ரா விருது (வீரத்துடன் போராடியவர்கள்) ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திரதின நிகழ்ச்சியின்போது இந்திய அரசு இந்த விருதுகளை வழங்கிவருகிறது. ராணுவத்தினர், பொதுமக்கள், காவல் துறையினர், மத்திய ஆயுதப்படை வீரர்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவார்கள்.

விண்ணப்பிக்கலாம்

பல்வேறு நிகழ்வுகளான இயற்கை பேரழிவுகள் விபத்து, நீரில் மூழ்கியவரை காப்பாற்றியவர், தீ விபத்துக்கள், தீவிரவாத தாக்குல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுத்தவர்கள் ஆகியோருக்கு வீர தீர செயல்கள் புரிந்தமைக்காக அசோக சக்ரா விருதுகளை பல்வேறு பிரிவுகளில் இந்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி 2019-ம் ஆண்டிற்கான அசோக சக்ரா வீர தீர விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள், இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசோக சக்ரா வீரதீர விருதிற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story