அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்


அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 8:26 PM GMT)

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வந்தது.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்துள்ள பெருநாவளூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வந்தது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 2019-20 கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் நடைபெற்றது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ஜெயராஜ் முதல் சேர்க்கை விண்ணப்பத்தை ஒரு மாணவிக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

Next Story