சின்னமனூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை


சின்னமனூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2019 3:30 AM IST (Updated: 13 May 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதனால், கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை கடையை திறப்பதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் வந்தனர். அப்போது, கடையின் கதவை உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உள்ளே இருந்த பணம், மது பாட்டில்கள் திருடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் செல்வம், ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story