கும்பகோணம் அருகே மோட்டார்சைக்கிள்கள் திருட்டு; 3 பேர் கைது


கும்பகோணம் அருகே மோட்டார்சைக்கிள்கள் திருட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2019 4:00 AM IST (Updated: 20 May 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே மோட்டார்சைக்கிள்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன். இவருடைய மகன் பிரவீன் (வயது27). இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார்சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதேபோல கும்பகோணம் செம்போடையை சேர்ந்த ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26) என்ப வருடைய மோட்டார்சைக்கிளையும் கடந்த 14-ந் தேதி ம ர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இந்த சம்பவங்கள் குறித்து பிரவீன், வைரவேந்தன் ஆகியோர் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே நாளில் நடந்த மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் தாராசுரம் எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன்(28), மாரிமுத்து மகன் தாமோதரன்(24), மதுக்கூர் ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகிய 3 பேரும் மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 

Next Story