1344-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


1344-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

1344-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரும்பிடுகு முத்தரையர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டியில் தமிழகத்தில் மத்திய மண்டலத்தை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்தரையர் இன முதற்பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர். நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் பெரும்பிடுகு முத்தரையரின் 1344-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி கேட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை

விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு புஷ்பராஜ் அம்பலகாரர் தலைமை தாங்கினார். புலவர் பூசி தமிழரசன் முன்னிலை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் திருமலைராய சமுத்திரம் திருமலைநம்பி வரவேற்று பேசினார். தொடர்ந்து முத்தரையர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளைச்சாமி, காமராஜ், லட்சுமணன், மாரிமுத்து, செல்லையா, அழகு, ராஜசேகர், ஸ்டூடியோ தங்கப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலச்சந்தர் நன்றி கூறினார்.

இதேபோல் அரிமளம் ஒன்றியம் கல்லுகுடியிருப்பு கிராமத்தில் உள்ள பேரரசர் பெரும்மிடுகு முத்தரையர் சிலைக்கு ஊர் அம்பலம் கருப்பையா தலைமையில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் சிதம்பர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் கீழப்பளுவஞ்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முத்தரையர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

Next Story