நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: விடுதலை சிறுத்தை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பொன்னேரி,
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாவட்ட செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கோபி நயினார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நெடுஞ்செழியன், மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அமரகவி, மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலைவாசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு, பொன்னேரி நகர செயலாளர் மதன், இளைஞரணி தொகுதி அமைப்பாளர் அபுபக்கர் உட்பட பலர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Related Tags :
Next Story