இளம்பிள்ளை அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு


இளம்பிள்ளை அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Jun 2019 10:15 PM GMT (Updated: 3 Jun 2019 8:13 PM GMT)

இளம்பிள்ளை அருகே பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இளம்பிள்ளை, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் சுண்டெலி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டின் மாடியில் குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் குமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

இரவு 8 மணியளவில் வீட்டின் உரிமையாளர் அந்த பகுதியில் வந்தபோது குமார் வீட்டில் இருந்து ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடுவதை கண்டார். உடனே இதுபற்றி குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்துபார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சங்ககிரி துணை சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தி திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story