மாவட்ட செய்திகள்

கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை + "||" + Male dead in the well; Murder? Police investigation

கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை

கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நெல்வாய் ஊராட்சி சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளி கிணற்றில் நேற்று முன்தினம் ஆண் பிணம் மிதப்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின்படி செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப் –இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்பட போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

கிணற்றில் பிணமாக மிதந்தவருக்கு 60 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்து பேனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது
கன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கிண்டியில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை பிணத்தை கால்வாயில் வீசிச்சென்றவர்களுக்கு வலைவீச்சு
கிண்டியில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பிணத்தை கால்வாயில் வீசிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளியின் உடலை போலீசார் மீட்டனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பச்சிளம் குழந்தையின் உடலை நாய் கவ்வி வந்ததால் பரபரப்பு கடலில் வீசியவர் யார்? போலீஸ் விசாரணை
ஈத்தாமொழி அருகே பச்சிளம் குழந்தையின் உடலை நாய் வாயில் கவ்வி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குழந்தையை கடலில் வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது
புதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.