தஞ்சை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடுவோம் அ.ம.மு.க. மாநில பொருளாளர் ரெங்கசாமி பேச்சு


தஞ்சை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடுவோம் அ.ம.மு.க. மாநில பொருளாளர் ரெங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:45 PM GMT (Updated: 27 Jun 2019 7:06 PM GMT)

தஞ்சை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடுவோம் என அ.ம.மு.க. மாநில பொருளாளர் ரெங்கசாமி பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட பொன்.முருகேசன் ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இருவரும் தஞ்சை கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி பேசியதாவது:-

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தமிழக மக்களுக்காக என்றைக்கும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அ.ம.மு.க. தான். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காக்க டி.டி.வி.தினகரன் குரல் கொடுத்து வருகிறார். தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது ஜனநாயக கடமை.

போராடுவோம்

அந்த ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறோம். இதுவரை 2 முறை என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தீர்கள். கடந்த தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு நன்றி கடன்பட்டியிருக்கிறேன். ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்காக வீடுகளை இடிக்க போகிறார்கள் என்றவுடன் இந்த ஆட்சிக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தினோம். தஞ்சை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க என்றைக்கும் போராடுவோம். தேர்தலில் எங்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறுஅவர் பேசினார்.

Next Story