குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 15 இடங்களில் நடந்தது


குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 15 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 8:29 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 15 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் ராமநாதன், விழுப்புரம் வட்ட செயலாளர் நிதானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சகாபுதீன் ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருக்கோவிலூரில் ஒன்றிய செயலாளர் ரவி தலைமையிலும், அரகண்டநல்லூரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், தியாகதுருகத்தில் ஒன்றிய செயலாளர் அப்பாவு தலைமையிலும், வெள்ளிமலையில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், கச்சிராயப்பாளையத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையிலும், கெடிலத்தில் ஒன்றிய செயலாளர் வேலு தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமையிலும், மயிலத்தில் வட்ட செயலாளர் இன்பஒளி தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையிலும், பகண்டை கூட்டுசாலையில் வட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையிலும், சங்கராபுரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் திருப்பதி தலைமையிலும், கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் வட்ட துணை செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், செஞ்சியில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story