பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் ஆண்களுக்கு மேன்மை தரும் கி. வீரமணி பேச்சு


பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் ஆண்களுக்கு மேன்மை தரும் கி. வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 7 July 2019 11:00 PM GMT (Updated: 7 July 2019 8:24 PM GMT)

பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் ஆண்களுக்கு மேன்மை தரும் என்று மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் கி.வீரமணி பேசினார்.

திருச்சி,

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் பெண் விடுதலை நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் கலி.பூங்குன்றன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். நூலின் முதல் பிரதியை முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் வெளியிட அதனை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். மணியம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி கி.வீரமணி பேசுகையில், ‘பெண் விடுதலையை பற்றி பெரியார் அதிகம் பேசி இருக்கிறார். புத்தகம் எழுதி இருக்கிறார். உலகில் சரிபாதி பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் ஆண்களுக்கு மேன்மையை தரும். எனவே பெண்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். தந்தை பெரியார் சமுதாயத்தில் உள்ள மேடு பள்ளங்களை சமப்படுத்தியதோடு பெண் கல்விக்காகவும் அயராது பாடுபட்டார்’ என்றார்.

நேரு பரபரப்பு பேச்சு

முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், ‘பெரியார் மணியம்மை அம்மையாரை திருமணம் செய்யவில்லை என்றால் அண்ணா, தி.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கி இருக்க மாட்டார். தி.மு.க. என்ற அரசியல் இயக்கம் உருவாகி இருக்காவிட்டால் ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்தின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டு இருக்காது’ என்றார்.

Next Story