வெங்கக்கல்பட்டி குளத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
வெங்கக்கல்பட்டி குளத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் அணுகு சாலையை ஒட்டியபடி குளம் ஒன்று உள்ளது. முன்பு அமராவதி ஆற்றின் உபரி நீரானது வாய்க்கால்கள், ஓடை வழியாக கொண்டுவரப்பட்டு இந்த குளத்தில் தேக்கி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த குளத்திலிருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து நீர்வழிப்பாதை வழியாக சென்று கரூரிலுள்ள ஏனையகுளங்களுக்கு தண்ணீர் செல்லும் படி இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக வெங்கக்கல்பட்டி குளம் பராமரிப்பின்றி இருந்ததால், அதில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் வேண்டாத செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் காய்ந்து போய் கிடக்கிறது. இதனால் சிலர் குளத்தில் ஜல்லிகற்கள்-தார் கலந்த கலவையின் கழிவுகள், கான்கிரீட் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
கோரிக்கை
மேலும் அந்த குளத்துநீர் மறுகால் பாய்ந்து செல்வதற்கு வசதியாக வெங்கக்கல்பட்டி பாலத்தின் கீழ்புறம் போடப்பட்ட நீர்வழிப் பாதையிலும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டியுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் குளத்தில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு மட்டும் அல்லாமல் குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்த குளத்தினையும், அதனையொட்டிய நீர்வழிப்பாதைகளையும் தூர்வாரி பழையபடி தங்குதடையின்றி தண்ணீர் குளத்திற்கு கிடைத்திட வழிவகை செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும் என வெங்கக்கல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story