நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: கார்த்திகேயன் மீண்டும் சிறையில் அடைப்பு - சி.பி.சி.ஐ.டி. 5 நாள் விசாரணை முடிந்தது


நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: கார்த்திகேயன் மீண்டும் சிறையில் அடைப்பு - சி.பி.சி.ஐ.டி. 5 நாள் விசாரணை முடிந்தது
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்திகேயன் சி.பி.சி.ஐ.டி. விசா ரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த மாதம் 23-ந் தேதி கொடூரமாக கொலை செய் யப்பட்டனர். அப்போது உமா மகேசுவரி அணிந்து இருந்த 21 பவுன் நகை திருடப்பட்டது. பாளையங்கோட்டை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ள உமாமகேசுவரி வீட்டில் நடந்த இந்த படுகொலை குறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் பாளையங் கோட்டை சாந்திநகரை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை (32) போலீ சார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 பவுன் நகை, கொலைக்கு பயன் படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. அந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடி சியல் மாஜூஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்துவருகிறது.

கார்த்திகேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாபு, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 7-ந் தேதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து அவரை போலீசார் பாளையங் கோட்டையில் உள்ள சி.பி .சி.ஐ.டி. போலீஸ் நிலையத் துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை போலீஸ் ஐ.ஜி. சங்கரன் முன்னிலையில் நடந்தது.

3 பேர் கொலைக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை போலீசார் கேட்டனர். விசாரணை விடிய, விடிய நடத்தப்பட்டது. அப்போது கார்த்திகேயன் பல முக்கிய தகவல்களை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்த விசாரணை நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு அனில் குமார் தலைமையில் கார்த்தி கேயனை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இருந்து வேன் மூலம் பாளையங் கோட்டையில் உள்ள நீதிபதி குடியிருப்புக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர். நேற்று பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் முதலாவது ஜூடிசியல் கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) கடற்கரை செல்வம் வீட்டில் கார்த்தி கேயன் ஆஜர் படுத்தப் பட்டார்.

அப்போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை நடந்தபோது உமாமகேசுவரி வீட்டில் சில முக்கிய தடயம் இருப்பது பற்றி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவரை உமா மகேசுவரி வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை செய்ய வேண்டும்“ என்றனர். அதற்கு நீதிபதி கடற்கரை செல்வம், சோதனையை விரைந்து முடித்து விட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவரை அடைக்க வேண்டும் என்று உத்தரவிட் டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதைத்தொடர்ந்து அவரை வேன் மூலம் பாளையங் கோட்டை ரோஸ்நகரில் உள்ள உமா மகேசுவரி வீட் டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய் தனர். பின்னர் கார்த்திகேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் உள்பட பலருக்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி. சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story