ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 7:41 PM GMT)

அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும், ‘நெக்ஸ்ட்‘ தேர்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முதல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வாகி சண்முக பாரதி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் தலைவர் யாதவ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவு மற்றும் வார்டுகளில் பயிற்சி டாக்டர்கள் யாரும் பணியில் ஈடுபடவில்லை.

Next Story