மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபர் கைது + "||" + A construction magnate has been arrested for allegedly defrauding 350 people claiming to give them a low cost home

குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபர் கைது

குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபர் கைது
குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் மும்பை டோங்கிரியில் வைத்து கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.
மும்பை,

நவிமும்பை பன்வெலை சேர்ந்தவர் சச்சின் ஜெண்டே. கட்டுமான அதிபராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் பன்வெல் தாலுகா பகுதியில் புதிதாக கட்டிடம் கட்ட இருப்பதாகவும், குறைந்த விலையில் வீடு தருவதாகவும் விளம்பரம் செய்து இருந்தார்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த 350 பேர் அவரிடம் வீடு பெறுவதற்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாளில் வீடு அவர்களுக்கு ஒதுக்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை சந்தித்து தங்களது பணத்தை திருப்பி கேட்டனர்.

அப்போது அவர் 187 பேருக்கு காசோலையை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சச்சின் ஜெண்டே வீடு தருவதாக கூறி 350 பேரிடம் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் மும்பை டோங்கிரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சச்சின் ஜெண்டேவை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை வருகிற 19-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பிட்காயின் பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடி; 5 பேர் கைது
‘பிட்காயின்’ பெயரில் திருச்சியில் ரூ.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடலை புதைத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. போதையில் நடந்த தகராறில் நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொன்று கிணற்றில் வீசிய வாலிபர் கைது
போதையில் நடந்த தகராறில் நண்பனை மது பாட்டிலால் குத்திக்கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தம்பதி 5 பேர் கைது
ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக தங்களது 13 வயது மகளை வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்த தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி சேலத்தை சேர்ந்தவர் கைது
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.