திருச்சியில் விநாயகர் சிலைகள் இன்று ஆற்றில் கரைப்பு - காவிரி பாலத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


திருச்சியில் விநாயகர் சிலைகள் இன்று ஆற்றில் கரைப்பு - காவிரி பாலத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:15 AM IST (Updated: 4 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் விநாயகர் சிலைகள் இன்று ஆற்றில் கரைக்கப்படுகிறது. இதையொட்டி காவிரி பாலத்தில் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

திருச்சி,

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலா கலமாக கொண்டாடப் பட்டது. திருச்சி மாநகரத்துக் குட்பட்ட பகுதிகளில் 244 சிலைகளும், புறநகரில் 1,009 சிலைகளும் வைக்கப்பட்டு, தினமும் பூஜை செய்து வருகிறார்கள். சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அனைத்து சிலைகளும் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது. புறநகரில் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட் டுள்ள சிலைகள் காவிரி ஆற்றில் ஆங்காங்கே கரைக்கப் படுகின்றன. பெரும்பாலான சிலைகள் காவிரி பாலத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தையொட்டி திருச்சி காவிரி பாலத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப் பட்டு, ஆங்காங்கே மேடை அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள் ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இது தவிர, பெரிய சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக கிரேன் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையிலும், சிலை கள் கரைக்கப்பட உள்ள காவிரி பாலத்திலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர் வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் இன்று பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் போக்கு வரத்தில் அவ்வப்போது சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித் துள்ளனர்.

Next Story