காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்
காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்தது. கடந்த 23-ந்தேதி காலாண்டு தேர்வு முடிந்து மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
விடுமுறை முடிந்து வழக்கம்போல பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருகை தந்தனர். பின்னர், காலாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர்.
விலையில்லா பாடப்புத்தகங்கள்
அதைத்தொடர்ந்து 2-ம் பருவ காலத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தக்கங்கள், குறிப்பேடுகளை பள்ளி தலைமை ஆசிரியை திருமலைசெல்வி, உதவி ஆசிரியர் ஷம்ஷுன்னிசா பேகம் ஆகியோர் வழங்கினர்.
இதேபோல பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் 2-ம் பருவகால விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story