கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.
x
தினத்தந்தி 5 Oct 2019 3:30 AM IST (Updated: 5 Oct 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளைகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 8 பேர் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து 10 பேரையும் விடுவிக்கக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌‌ஷயான், மனோஜ் 2 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மேலும் சதீசன், சம்சீர் அலி, சந்தோ‌‌ஷ்சாமி, திபு, மனோஜ்சாமி, ஜித்தின்ராய், பிஜின், உதயகுமார் ஆகிய 8 பேர் ஆஜரானார்கள்.

வழக்கை நீதிபதி வடமலை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆஜரானார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆனந்த், சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு ‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரை போலீசார் பாதுகாப்பாக கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Next Story