அந்தியூர் தவுட்டுப்பாளையம் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வினியோகம்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வினியோகம் செய்யப்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் தவுட்டுப்பாளையம் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினார்.
இதில் அந்தியூர் தாசில்தார் மாலதி, கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், பாலுசாமி, கிருஷ்ணன், செல்லவராஜ், குருராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் எண்ணமங்கலம், பச்சாபாளையம் பகுதி ரேஷன் கடைகளிலும் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story