கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட வாளவாடி ஊராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு
வாளவாடி ஊராட்சி பணியாளர்களின் கொரோனா தடுப்பு பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் சமூகஆர்வலர்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தளி,
உடுமலையை அடுத்த பெரிய வாளவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி, பழையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பணிகளில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தெருக்களை சுத்தம் செய்தல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு, வீடுகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. அதுமட்டுமின்றி குடிநீர் வினியோகம் தட்டுப்பாடின்றி சீராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாளவாடி ஊராட்சி பணியாளர்களின் கொரோனா தடுப்பு பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் சமூகஆர்வலர்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது ஊராட்சி பணியாளர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் சூரிய பிரபாதம்புராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட இணைச்செயலாளர் திலீப், கிராம உதவியாளர் பரமேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story