கிருஷ்ணகிரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் 8 மணி நேர வேலை நேரத்தை அதிகரித்து, 12 நேரமாக உயர்த்துவதை கண்டித்து சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட துணைத்தலைவர் மைக்கேல்ராஜ், கஜேந்திரா, நாகராஜ், சங்கர், கோரா என்கிற சர்ப்புதீன், சங்கரநாராயணன், கருணாநிதி, வேலு, நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிலாளர்களின் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக இருக்கின்ற இந்த அரசினுடைய கொள்கைகள் தவறானது. அதே போல் 8 மணி நேர வேலை என்பது மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக, தியாகத்தின் மூலமாக வென்றெடுத்த அந்த உரிமைகளை கெடுக்கிற வகையில் மத்திய அரசும், மாநில அரசும் 12 மணி நேரமாக உயர்த்தினால், அது மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். இந்த முடிவை மத்திய, மாநில அரசுகள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இருந்தது போல் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story