சேலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 4 Jun 2020 9:10 AM IST (Updated: 4 Jun 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணராஜா (வயது 35). கடந்த மாதம் சித்தனூர் பகுதியை சேர்ந்த மாலிக் பாட்ஷா என்பவர் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை சரவணராஜா வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.2,800-யை பறித்தார்.

மேலும் அவரை கத்தியால் சில இடங்களில் குத்தினார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணராஜாவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர் மீது ஏற்கனவே சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சரவணராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து சரவணராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Next Story