மாவட்ட செய்திகள்

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் + "||" + The crowds in meat shops are the public who have forgotten the social gap

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து இறைச்சி வாங்கி சென்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடைகளின் முன்பு சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்பதற்கு வட்டம் போடப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா' : சீனா எச்சரிக்கை
கொரோனாவை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ‘அறியப்படாத நிமோனியா’ கஜகஸ்தானில் பரவுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் சாவு; 262 பேருக்கு நோய் தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் மேலும் 262 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. கோவையில் ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
கோவை ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
4. அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி; கடைகளை அடைக்க உத்தரவு
அரியலூர் நகரில் பூக்கடை வைத்திருந்த ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
5. கொரோனாவை பயன்படுத்தி சொந்த ஆதாயம்: சீனா மீது விசாரணை கோரி மசோதா-அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
சீனா மீது விசாரணை கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.