பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு


பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 12:42 AM GMT (Updated: 16 Sep 2020 12:42 AM GMT)

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர் தெற்கு), செல்வமணி (வேப்பூர் வடக்கு), கர்ணன் (ஆலத்தூர் கிழக்கு), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை மேற்கு), ரவிச்சந்திரன் (வேப்பந்தட்டை வடக்கு), செல்வகுமார் (பெரம்பலூர்) மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அ.ம.மு.க.வின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் பீமா ரஞ்சித்குமார் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். குரும்பலூரில் உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

மாலை அணிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், பாலக்கரை அருகே உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story